This Article is From Aug 01, 2020

நீயா? நானா? - மூர்க்கத்தனமாக சண்டையிடும் பாம்புகள்! வைரல் வீடியோ!!

இரண்டு பாம்புகள் ஒன்றையொன்று சுழன்றுக் கொண்டு சண்டையிடும் வைரல் வீடியோ

நீயா? நானா? - மூர்க்கத்தனமாக சண்டையிடும் பாம்புகள்! வைரல் வீடியோ!!

நீயா நானா என்று சண்டையிடும் பாம்பு!

மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் மற்ற உயிரினங்களும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும். நாய், மாடு உள்ளிட்ட வீட்டு விலங்குகளும், புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளும் சண்டையிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பாம்பு சண்டையிடுவதை பார்த்திருக்கிறீர்களா?

சுஷாந்தா நந்தா என்ற இந்திய வனத்துறை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு பாம்புகள் சண்டையிடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் இரண்டு பாம்புகளும் ஒன்றையொன்று சுழன்றுக் கொண்டு சண்டையிடுகிறது. ஒரு மனிதர் உயரத்துக்கு மேலேழுந்து இரு பாம்புகளும் சண்டையிட, அதை அப்படியே வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டும் ஆண் பாம்புகளும் என்றும், பெண் பாம்பு ஒன்றின் சேர்க்கைக்காக சண்டையிடுவதாக பலர் கருத்து தெரிவித்தனர். ஆனால், அது அதற்காக சண்டையிடவில்லை என்றும் கருத்துகளிடப்பட்டுள்ளன. நந்தா கூறுகையில், இரு பாம்புகளும் தன்னில் யார் பலம் வாய்ந்தது என்பதை நிரூபிப்பதற்காக சண்டையிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

நேஷனல் ஜியாகிராபி சேனல் பாம்புகள் குறித்து குறிப்பிகையில், பொதுவாக பாம்புகள் சண்டையிட்டால் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. மாறாக ஏதேனும் ஒரு பாம்பு வீழ்ந்து விடும். அவ்வாறு ஒரு பாம்பு வீழ்த்தும் வரையில் மற்றொரு பாம்பு தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்ளும். 

இந்த வீடியோ டுவிட்டரில் பதிவிட்டதில் பல்லாயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. 

Click for more trending news


.