பிரபல பாலிவுட் டிவி நடிகர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது

கரண் ஓபராய் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து அதை படம் பிடித்துள்ளார். பணம் கொடுத்தால் மட்டுமே வீடியோவை கொடுப்பதாக மிரட்டியுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிரபல பாலிவுட் டிவி நடிகர்  பாலியல் பலாத்கார வழக்கில் கைது

பெண்ணை பலாத்காரம் செய்து அதை படம் பிடித்துள்ளார்.


Mumbai: 

தொலைக்காட்சி தொடர் நடிகர் கரண் ஓபராய் ஒரு பெண்ணை பாலியல்
பலாத்காரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு மே 9 வரை போலீஸ் காவலில்
இருப்பார் என்று ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம்
செய்ததாகக் காவல்துறை கூறியுள்ளனர்.

கரண் ஓபராய் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து அதை படம் பிடித்துள்ளார்.
பணம் கொடுத்தால் மட்டுமே வீடியோவை கொடுப்பதாக மிரட்டியுள்ளார் என்று
ஓஷியார் பகுதி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையினை பதிவு
செய்துள்ளனர்.

பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரண் கைது செய்யப்பட்டுள்ளார். 
இந்திய குற்றவியல் பிரிவு 376 பலாத்காரம் மற்றும் 384 (பணம் பறிப்பு)  ஆகிய
பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் சைலேஷ்
பசல்வாட் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தன்னுடைய தொலைக்காட்சி பயணத்தை  மகேஷ்
பட் இயக்கிய ‘ஸ்வாமிமான்' என்ற தொடரிலிருந்து தொடங்கினார். ஃபேஷன்
மாடலாகவும், சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தவர். 

(With Inputs from ANI, PTI)சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................