This Article is From Nov 19, 2019

“4 காலில் தவழ்ந்ததையெல்லாம் எடப்பாடி மறந்துட்டாரு…”- தேர்தலுக்குத் தயாராகும் TTV தினகரன்!

TTV Dhinakaran - "எடப்பாடி பழனிசாமி, எப்படி முதல்வர் பதவி வாங்கினார் என்பதையெல்லாம் மறந்துவிட்டார்"

“4 காலில் தவழ்ந்ததையெல்லாம் எடப்பாடி மறந்துட்டாரு…”- தேர்தலுக்குத் தயாராகும் TTV தினகரன்!

TTV Dhinakaran - 4 கால்களில் குழந்தை போல தவழ்ந்து வந்து இவர் பதவி வாங்கியதை மறந்துவிட்டார். இப்போது அதிகாரம் இருக்கிற திமிரில் பேசித் திரிகிறார்.

TTV Dhinakaran - வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran) தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிமுக-வையும் (ADMK) முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் (Edappadi Palanisamy) கறாரான வார்த்தைகள் சொல்லி விமர்சித்துள்ளார். 

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், “சுயேட்சையாக தேர்தலில் நின்றால் தனித் தனிச் சின்னங்கள் ஒதுக்கப்படும். அது தேவையில்லை என்றுதான் இடைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை. மேலும், இடைத் தேர்தல்களைப் பொறுத்தவரை ஆளுங்கட்சிதான் எப்போதும் வெற்றி பெறும். எனவே, அந்த வெற்றியைக் கணக்கில் கொண்டு அதிமுக-வினரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகின்றனர். இவர்களது ஆட்டம் ஆட்சி இருக்கும் வரைதான். மேலே இருப்பவன் கைவிட்டால் இவர்கள் திரும்பவும் தலை தூக்கவே முடியாது. 

1jo8mjvg

எடப்பாடி பழனிசாமி, எப்படி முதல்வர் பதவி வாங்கினார் என்பதையெல்லாம் மறந்துவிட்டார். 4 கால்களில் குழந்தை போல தவழ்ந்து வந்து இவர் பதவி வாங்கியதை மறந்துவிட்டார். இப்போது அதிகாரம் இருக்கிற திமிரில் பேசித் திரிகிறார். வரும் இடைத் தேர்தலில் இந்த துரோகிகளை வீழ்த்தி, வெற்றி பெறுவதுதான் எங்களின் குறிக்கோள். 

இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்களை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடுவோம்,” எனப் பேசினார். 

மேலும் அவர், “அமமுக ஒரு கம்பெனி என்று விமர்சிக்கிறார் எடப்பாடி. அது ஒரு கட்சியே இல்லை, அதில் தினகரன் மட்டும்தான் உள்ளார் என்கிறார். பின்னர், சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் அனைத்து அமமுக நிர்வாகிகளும் அதிமுக-வில் இணைந்து வருகிறார்கள் என்கிறார். அவரின் கருத்தே முன்னுக்குப் பின் முரணுடையதாக இருக்கிறது,” என்றார். 


 

.