This Article is From Dec 27, 2018

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்!

மசோதாவுக்கு ஆதரவாக 245 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர்

New Delhi:

முத்தலாக் குறித்த முக்கிய தகவல்கள்,

மக்களவையில் முத்தலாக் தடை மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 245 பேரும், எதிராக 11 பேரும் வாக்களித்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை உள்ளிட்ட 5 விடுமுறை நாட்களுக்கு பின்னர் இன்று மக்களவை கூடியதும் முத்தலாக் மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சுமார் 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், எதிர்கட்சிகள் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.

முத்தலாக் மசோதா மீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாதி கட்சிகளின் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முத்தலாக் குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்வது என்பது சட்ட விரோதமாகும்' என்று தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு, இந்த மசோதாவை கொண்டு வருகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்தச் சட்டம் அமலுக்கு வருவதன் மூலம், முத்தலாக் கொடுத்து விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணத் தொகையும் அளிக்கப்படும்.

திருத்தப்பட்ட மசோதாவில், பாதிக்கப்பட்டப் பெண்ணோ அல்லது அவருக்கு மிகவும் நெருக்கமான உறவினரோ மட்டும்தான், சம்பந்தப்பட்ட ஆணுக்கு எதிராக புகார் கொடுக்க முடியும். மேலும், பாதிக்கப்பட்ட பெண் விருப்பப்பட்டால் புகாரை திரும்பப் பெறவும் முடியும்.

கடந்த செப்டம்பர் மாதம், மத்திய அரசு முத்தலாக்கை குற்றமாக்கும் அவசரச் சட்டத்தை அமல் செய்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இருக்கும்.

முத்தலாக் குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், ‘முத்தலாக் சட்ட சாசனத்துக்கு எதிரான நடைமுறை. அது மதத்துக்கு சம்பந்தப்பட்டதாக பார்க்க முடியாது' என்று கூறியது.

முத்தலாக் புகார் தொடர்பாக ஒரு ஆண் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு சம்பந்தப்பட்ட பெண் சம்மதம் தெரிவித்தால் மட்டும் தான் பிணை கொடுக்க முடியும் என்று புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது.

.