This Article is From Jan 16, 2019

முதன்முறையாக கும்பமேளாவில் புனித நீராடிய திருநங்கைகள்..!

முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரயாக்ராஜ் மாவட்டத்தில்தான் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது.

முதன்முறையாக கும்பமேளாவில் புனித நீராடிய திருநங்கைகள்..!

மார்ச் 4 ஆம் தேதி வரை இந்த கும்பமேளா விழா நடைபெறும்.

ஹைலைட்ஸ்

  • இந்த ஆண்டு கும்பமேளாவுக்கு 14 கோடி பேர் வர வாய்ப்பு
  • திருநங்கைகளுக்கு கும்பமேளாவில் சிறப்பு மரியாதை கொடுக்கப்பட்டது
  • பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது
Prayagraj:

மகர சங்கராந்தியான நேற்று உத்தர பிரதேச மாநிலத்தில் கும்பமேளா விழா தொடங்கியது. இதையடுத்து கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஒன்றாகும் சங்கத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். உலகின் மிக அதிகமாக யாத்ரீகர்கள் கூடும் விழாவான கும்பமேளாவில் இந்த ஆண்டு 12 கோடி பேருக்கு மேல் பங்கேற்பார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த கும்பமேளா நிகழ்ச்சியில் முதன்முறையாக திருநங்கைகள் நேற்று புனித நீராடியுள்ளனர்.

20 லட்சத்துக்கும் அதிகமான திருநங்கைகள் இந்தியாவில் இருந்தாலும், நேற்றுதான் அவர்களுக்கு கும்பமேளா நிகழ்ச்சியில் புனித நீராட அனுமதி கிடைத்தது. பல திருநங்கைகள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற உடை போட்டு, பூ மற்றும் பொட்டு வைத்து சங்கத்தில் நீராடி வழிபட்டனர். 

பல ஆண்டுகளாக கும்பமேளா நிகழ்ச்சியில் புனித நீராட வேண்டுமென்று நினைத்திருந்த திருநங்கை லக்‌ஷ்மி நாராயண் திரிபாதி நேற்றுதான் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. “கும்பமேளா நிகழ்ச்சியில் எங்களை ஏற்றுக் கொள்வது என்பது இந்த சமூகம் எங்களை ஏற்றுக் கொள்வதற்குச் சமம். கடவுள் நம் எல்லோருக்குள்ளேயும் இருக்கிறார். நாம் இறந்தால் மீண்டும் அவரிடம்தான் செல்லப் போகிறோம்” என்று உணர்ச்சிப் பொங்கியபடி நம்மிடம் பேசினார் லக்‌ஷ்மி.
 

f3hlvuc8

லக்‌ஷ்மி நாராயண் திரிபாதி

மிக அதிக மக்கள் கும்பமேளா விழாவுக்கு வருவார்கள் என்பதால், கும்ப் நகரிப் பகுதியில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களில் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்ப் நகர், 32000 ஹெக்டேர்கள் பரப்பளவைக் கொண்டது. 

விழா நடக்கும் இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. போன்டூன் பாலம் மார்க்கமாக சென்றுதான் மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் நீராட முடியும். அந்தப் பாலத்திலும் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

15 மாநில அரசுத் துறைகள், 28 மத்திய அரசுத் துறைகள் மற்றும் 6 மத்திய அமைச்சகத் துறைகள் இந்த முறை கும்பமேளா விழாவை சுமூகமாக நடத்திட பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரயாக்ராஜ் மாவட்டத்தில்தான் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. மார்ச் 4 ஆம் தேதி வரை இந்த கும்பமேளா விழா நடைபெறும்.


 

.