This Article is From Aug 21, 2018

கேரள ரயில் சேவையில் முன்னேற்றம்..!

ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை, கேரளாவில் 159 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 11 பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன

கேரள ரயில் சேவையில் முன்னேற்றம்..!
Trivandrum:

கடும் மழை காரணமாக கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் இயக்காமல் வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை, தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக ஆரம்பிக்கப்படவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க அளவுக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கயன்குளம் - கோட்டயம் - எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு - ஷோரனூர் - கோழிக்கோடு ஆகிய வழித் தடங்களில் ரயில்கள் மீண்டும் செல்கின்றன.

திருவணந்தபுரம் - எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆலுவா - திருச்சூர், திருச்சூர் - ஷோரனூர், கயம்குளம் - கோட்டயம் - எர்ணாகுளம் ஷோரனூர் - திரூர், ஷோரனூர் - பாலக்காடு ஆகிய ரயில் தடங்களில் இருந்த பாதிப்புகள் நீக்கப்பட்டு சேவை ஆரம்பமாகியுள்ளன.

அதேபோல, திருவணந்தபுரம், திருநெல்வேலி மற்றும் மதுரை - சென்னை, எழும்பூர், ஹௌரா, கோராக்பூர், புபனேஷ்வர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆலுவா- திருச்சூர், திருச்சூர் - ஷோரனூர் ஆகிய பகுதிகளில் இருந்த ட்ராஃபிக்கும் சரி செய்யப்பட்டு விட்டன. 

ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை, கேரளாவில் 159 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 11 பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

.