This Article is From Jun 29, 2020

கொரோனா: மும்பையில் அமலானது ’2 கி.மீ தூர விதி’: கடும் போக்குவரத்து நெரிசல்!!

குறிப்பாக இந்த போக்குவரத்து நெரிசலானது தாஹிசார் சுங்கச்சாவடியில் அதிகம் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் இதுவே நகரத்தின் நுழைவுவாயில் ஆகும். 

கொரோனா: மும்பையில் அமலானது ’2 கி.மீ தூர விதி’: கடும் போக்குவரத்து நெரிசல்!!

கொரோனா: மும்பையில் அமலானது ’2 கி.மீ தூர விதி’: கடும் போக்குவரத்து நெரிசல்!!

Mumbai:

மும்பையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து 2 கி.மீ.க்குள் தான் பயணம் செய்ய வேண்டும் என்ற விதி இன்று முதல் அமலானதை தொடர்ந்து, போலீசார் பல்வேறு சோதனை மையங்களை அமைத்து கடும் கெடுபிடி காட்டி வருவதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக இந்த போக்குவரத்து நெரிசலானது தாஹிசார் சுங்கச்சாவடியில் அதிகம் ஏற்பட்டுள்ளது, ஏனெனில் இதுவே நகரத்தின் நுழைவுவாயில் ஆகும். 

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 2 கி.மீ தூரம் விதிமுறையை மீறுபவர்களின் வாகனங்களையும் மும்பை காவல்துறை பறிமுதல் செய்து வருகிறது.

பொதுமக்கள் மார்க்கெட், சலூன், கடைகள், நடைபயிற்சி போன்ற தேவைகளுக்கு தங்களது வீட்டில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்குள் உள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். வீட்டில் இருந்து தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், பொருளாதார நடவடிக்கைகளை துவங்க தயாராகி வருகிறது. 

இந்நிலையில், மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அலுவலகம் செல்பவர்கள் மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே 2.கி.மீ தூரம் தாண்டி பயணிக்க அனுமதி வழங்கப்படும். அதனால், அனைத்து பொதுமக்களும் பொறுப்புணர்ந்து செயல்பட்டு, தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். எப்போதும், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே கொரோனாவை வெல்ல முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது, மீண்டும் லாக்டவுன் அமலாகமல் இருக்க பொது மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளை அரசு மீண்டும் தொடங்குவதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரித்த அவர், மக்கள் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த 15 நாட்களாக படிப்படியாக, அலுவலகங்கள் மற்றும் கடைகளையும், அத்தியாவசிய பணிகளில் உள்ள ஊழியர்களுக்காக மும்பையில் உள்ளூர் ரயில் சேவைகளையும் துவங்கி வருகிறோம். பொருளாதார நடவடிக்கையை மீண்டும் துவங்குவதால், ஆபத்து நீங்கியதாக ஆர்த்தமில்லை. அதனால், தேவையிருப்பவர்கள் மட்டும் வீட்டை விட்டு வெளியே வாருங்கள் என்று அவர் கூறியுள்ளார். 

.