This Article is From Sep 04, 2018

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த சிவில் சர்விஸ் தேர்வு அட்டவணை வெளியானது

பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றலாம்

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த சிவில் சர்விஸ் தேர்வு அட்டவணை வெளியானது
New Delhi:

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த பொறியியல் சேவைக்கான, முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை வைத்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்.

பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள், இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றலாம். ஆன்லைனில் பதிவேற்றப்பட வேண்டிய சான்றிதழ்கள் பற்றி டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் காணலாம். மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

டி.என்.பி.எஸ்.சி ஒருங்கிணைந்த சிவில் சர்விஸ் (குரூப் 2) பிரிலிம்ஸ் தேர்வு அட்டவணை

ஒருங்கிணைந்த குரூப் 2 சிவில் சர்விஸ் தேர்வு நவம்பர் 11-ம் தேதி நடக்க இருக்கிறது. விண்ணப்பம் அளிக்க செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள்.

பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் ஃபிப்ரவரி 2019-ல் வெளியாகும். மெயின் தேர்வுகள் மே 2019-ல் நடைபெறும். மேலும், தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறையில் புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் கணிதம் மற்றும் புள்ளியியல் துறை பாடங்களை முக்கிய பாடமாக படித்திருக்க வேண்டும். இதற்கான தேர்வு நவம்பர் 24, 2018 அன்று நடைபெறும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலத்தில் நடக்க இருக்கிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்களை சேர்த்து, தேர்வு செய்யப்படுவர்

 

.