This Article is From Aug 21, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

இன்று மட்டும் 5,764 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,07,677 ஆக அதிகரித்துள்ளது. இன்று 101 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

ஹைலைட்ஸ்

  • இன்று 101 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்
  • ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,340 ஆக அதிகரித்துள்ளது
  • தற்போது 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.67 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 74,344 மாதிரிகளில் 5,995 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து 23வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தற்போது ஒட்டு மொத்த பாதிப்பு 3,67,430 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 5,764 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,07,677 ஆக அதிகரித்துள்ளது. இன்று 101 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த 19வது நாளாக இன்றும் 100க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,340 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,995 நபர்களில் 1,282 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,22,757 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 2,557 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 85

செங்கல்பட்டு - 430

சென்னை -1,282

கோவை - 395

கடலூர் - 242

தர்மபுரி - 25

திண்டுக்கல் - 129

ஈரோடு -103

கள்ளக்குறிச்சி - 50

காஞ்சிபுரம் - 220

கன்னியாகுமரி - 155

கரூர் - 41

கிருஷ்ணகிரி - 49

மதுரை - 86

நாகை - 49

நாமக்கல் - 62

நீலகிரி -46

பெரம்பலூர் -36

புதுக்கோட்டை - 98

ராமநாதபுரம் - 107

ராணிப்பேட்டை - 178

சேலம் - 269

சிவகங்கை - 38

தென்காசி - 112

தஞ்சை - 100

தேனி - 122

திருப்பத்தூர் - 100

திருவள்ளூர் - 369

திருவண்ணாமலை - 61

திருவாரூர் - 68

தூத்துக்குடி - 127

திருநெல்வேலி - 163

திருப்பூர் - 99

 திருச்சி - 110

வேலூர் - 200

விழுப்புரம் - 129

விருதுநகர் - 50

மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 2,115

செங்கல்பட்டு - 22,737

சென்னை - 1,22,757

கோவை - 10,957

கடலூர் - 8,090

தர்மபுரி - 1,094

திண்டுக்கல் - 5,432

ஈரோடு - 1,907

கள்ளக்குறிச்சி - 5,237

காஞ்சிபுரம் - 15,031

கன்னியாகுமரி - 8,248

கரூர் - 1,210

கிருஷ்ணகிரி - 1,760

மதுரை - 13,237

நாகை - 1,786

நாமக்கல் - 1,476

நீலகிரி - 1,220

பெரம்பலூர் - 1,116

புதுக்கோட்டை - 4,759

ராமநாதபுரம் - 4,307

ராணிப்பேட்டை - 9,091

சேலம் - 7,389

சிவகங்கை - 3,630

தென்காசி - 4,473

தஞ்சை - 5,457

தேனி - 11,131

திருப்பத்தூர் - 2,394

திருவள்ளூர் - 21,756

திருவண்ணாமலை - 9,188

திருவாரூர் - 2,680

தூத்துக்குடி - 10,422

திருநெல்வேலி - 8,198

திருப்பூர் - 1,875

 திருச்சி - 6,439

வேலூர் - 9,133

விழுப்புரம் - 5,771

விருதுநகர் - 11,843

.