This Article is From May 07, 2019

‘தமிழிசைக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!’- கலாய்த்த கமல்

கமல், வரும் மே 19 ஆம் தேதி நடக்கவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரங்களில் பிஸியாக இருக்கிறார்

‘தமிழிசைக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது!’- கலாய்த்த கமல்

‘அவர் எதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார். அவருக்கு தற்போது ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கிவிட்டது’

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்று கேலி செய்யும் விதத்தில் பேசியிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 

கமல், வரும் மே 19 ஆம் தேதி நடக்கவுள்ள 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் பிரசாரங்களில் பிஸியாக இருக்கிறார். இன்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

‘தமிழகத்தில் தற்போது பல இடங்களில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர், அது குறித்து' என்று கேட்டபோது, ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தப் பிரச்னையை தவிர்த்திருக்கலாம் என்பதுதான் பல வல்லுநர்களின் கருத்து. அப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுக்க தவறிவிட்டது' என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து அவரிடம், ‘தானே புயலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதும் அது குறித்து பாராட்ட கமலுக்கு மனமில்லை. டார்ச்லைட் சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள போதும், பார்வை கோளாறுடன் இருக்கிறார் கமல்- என தமிழிசை உங்களை விமர்சித்துள்ளாரே?' என்றதற்கு, ‘அவர் எதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார். அவருக்கு தற்போது ஆறுதல் சொல்லும் நேரம் நெருங்கிவிட்டது' என்று தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி சூசகமாக கருத்து சொன்னார். 


 

.