This Article is From Aug 30, 2018

மியான்மர் வெள்ள பாதிப்பால் 63,000 பேர் இடமாற்றம்

மத்திய மியான்மர் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் அணையின் ஒரு பகுதி உடைந்ததால், யடஷே ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது

மியான்மர் வெள்ள பாதிப்பால் 63,000 பேர் இடமாற்றம்

யங்கோன்: மத்திய மியான்மர் பகுதியில் உள்ள ஸ்வர் சாங் அணையின் ஒரு பகுதி உடைந்ததால், யடஷே ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

மேலும், பாகோ பகுதியில் உள்ள 85 கிராமங்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 63,000க்கும் மேற்பட்ட மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், யங்கோன் - மண்டலே ஆகிய பகுதிகளை இணைக்கும் பிராதன சாலையில், 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நீர் சூழ்ந்துள்ளது.

ஸ்வர் சாங் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவை தாண்டியதால், அணையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் போன்று, கடந்த மாதம், லாவோஸ் நகரத்தில் உள்ள அணை உடைந்ததில் 34 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காணமல் போன துயர சம்பவம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.