This Article is From Feb 06, 2019

'என்னை பெற்றதால் உங்கள் மீது வழக்கு கொடுத்துள்ளேன்!' - மும்பையில் விநோதம்

27 வயதான ரபேல் சாமுவேல் தான் இப்படி ஒரு வழக்கு கொடுக்கவுள்ளார்.

'என்னை பெற்றதால் உங்கள் மீது வழக்கு கொடுத்துள்ளேன்!' - மும்பையில் விநோதம்

தனது ஒப்புதல் இல்லாமல் தன்னை பெற்றெடுத்தது தவறு என பெற்றோருக்கு எதிராக வழக்கு கொடுக்கவுள்ளார் ரபேல்

தனது ஒப்புதல் இல்லாமல் தன்னை பெற்றெடுத்தது தவறு என பெற்றோருக்கு எதிராக வழக்கு கொடுக்கவுள்ளார் ஒருவர்.

இந்த விநோதமான செயல் மும்பையில் நடந்துள்ளது. 27 வயதான ரபேல் சாமுவேல் தான் இப்படி ஒரு வழக்கு கொடுக்கவுள்ளார்.

'அண்டினாட்டாலிசம் (Antinatalism) என்பது ஒரு சிந்தனையாகும். அது என்ன கூறும் என்றால், மக்கள் குழந்தைகளை பெற்று கொள்ள கூடாது. அப்படி குழந்தை பெற்று கொள்வதால், அந்த குழந்தைகள் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்' என ரபேல் கூறினார்

 

 
 

ரபேல் சாமுவேவ் இந்த அண்டினாட்டாலிசம் பின் பற்றுபவர். தன் சமூக வலைதளத்தில் இந்த அண்டினாட்டாலிசம் ஆதரவாக பல கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

 

 
 

தன்னை பெற்றதற்காக தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு கொடுக்க போவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் சாமுவேல். ஆனால் அதை சில நேரங்களுக்கு பின் அழித்துவிட்டார்.

 

 

Click for more trending news


.