This Article is From Mar 09, 2019

ரஃபேல் விவகாரத்தில் அரசின் பல்டியும் ப.சிதம்பரத்தின் கேலியும்!

ரஃபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் திருடப்பட்டதாக அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

ரஃபேல் விவகாரத்தில் அரசின் பல்டியும் ப.சிதம்பரத்தின் கேலியும்!

இவ்வளவு முக்கியத்துவமான ஆவணங்கள் திருடப்படும் அளவிலா மத்திய அரசு உள்ளது, என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வந்தார்

New Delhi:

ரஃபேல் ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரஃபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் திருடப்படவில்லை என்றும் மனுதாரர்களால் அதன் நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஃபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் திருடப்பட்டதாக அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வளவு முக்கியத்துவமான ஆவணங்கள் திருடப்படும் அளவிலா மத்திய அரசு உள்ளது, என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறிவருகிறார். இதேபோல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாயாவதி, சரத் பவார் உள்ளிட்டோரும் அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். 

இதையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ‘பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாக எதிர்கட்சிகள் வாதாடி வந்தன. ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது' என்றார்.

மத்திய அரசின் இந்த திடீர் பல்டி குறித்து ட்விட்டரில் கருத்திட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘புதன் கிழமை, ‘ஆவணங்கள் திருபடப்பட்டன'. வெள்ளிக் கிழமை அது ‘நகலெடுத்த ஆவணங்கள்' என மாறியது. அப்படியென்றால் இந்த இரண்டு நாட்களில் திருடப்பட்ட ஆவணங்களை திருடியவர் மீண்டும் கொடுத்துவிட்டார் போல' என்று கேலி செய்யும் விதத்தில் பதிவிட்டுள்ளார். 


 

.