This Article is From Nov 27, 2018

அமெரிக்க எல்லையில் கண் கலங்க வைத்த தாயின் கதறல்!

வடக்கிலிருந்து ஒரு வாரம் பயணித்து மெக்ஸிகோ எல்லைப்பகுதியான டிஜுனா வந்தடைந்தார் 5 குழந்தைகளின் தாயான மரியா மெஸா. அவர் மட்டுமல்ல 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எல்லையில் அமெரிக்க அரசால் துரத்துயடிக்கப்படுகின்றன.

அமெரிக்க எல்லையில் கண் கலங்க வைத்த தாயின் கதறல்!

மெஸா தன் 13 வயது மகள் ஜாமியை கையைபிடித்து இழுத்துச்செல்லும் படம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

TIJUANA, Mexico:

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் புலம்பெயர்ந்த தாய் ஒருவரின் அழுகை உலகையே அதிர வைத்துள்ளது. அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை கண்ணீர் புகை வீசி விரட்டியடிக்கும் செயலை செய்து வருகிறது. குழந்தைகளும், பெற்றோர்களும் சற்றும் எதிர்பாராத தருணத்தில், இதுபோன்ற செயல்களில் எல்லை பாதுகாப்புப்படை ஈடுபட்டது.

வடக்கிலிருந்து ஒரு வாரம் பயணித்து மெக்ஸிகோ எல்லைப்பகுதியான டிஜுனா வந்தடைந்தார் 5 குழந்தைகளின் தாயான மரியா மெஸா. அவர் மட்டுமல்ல 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எல்லையில் அமெரிக்க அரசால் துரத்துயடிக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து பேசிய மரியா மெஸா "நானும் என் குழந்தைகளும் மேலும் பல்வேறு வயதினரும் இங்கு கூடியுருந்தோம். அப்போது எங்களை நோக்கி 3 கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன" என்றார்.

duk08e9g

அங்கிருந்து மெஸா தன் 13 வயது மகள் ஜாமியை கையைபிடித்து இழுத்துச்செல்லும் படம் அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரிடன் கேட்ட போது "நான் இறந்து விடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தது. இது முற்றிலும் கண்டனத்துக்குரிய செயல். நாங்களும் மனிதர்கள் தானே" என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

"அமெரிக்க உள்துறை அதிகாரி ஒருவர் புலம்பெயர்ந்தவர்கள் எல்லை பாதுகாப்பு வீரர்களை தாக்கினார்கள்" என்று கூறியுள்ளார். 5200 பேர் எல்லையில் பரிதாபமான நிலையில் இருப்பதை ட்ரம்ப் அரசு கண்டுகொள்ளவில்லை.

ட்ரம்ப் அரசு அடிக்கடி எல்லையை மூடிவிடுகிறது. நிரந்தரமாக மூடுவதாகவும் கூறிவருகிறது. "அப்படியென்றால், நாங்கள் வேறு நாட்டுக்கு அகதியாக செல்ல வேண்டியது தான்" என்கிறார்கள் புலம்பெயர்ந்த அமெரிக்கர்கள்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.