This Article is From Dec 29, 2018

ஈராக்கில் ஒபாமா, ட்ரம்ப் இருவரும் செய்த பயணத்தில் என்ன வித்தியாசம்!

2009ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா இதேபோல ஈராக்கிற்கு சென்று படைகளை பார்வையிட்டார்.

ஈராக்கில் ஒபாமா, ட்ரம்ப் இருவரும் செய்த பயணத்தில் என்ன வித்தியாசம்!

ஒபாமாவின் பயணத்தின் போது அமெரிக்க படைகளை ஈராக் நாட்டிலேயே சந்தித்து பேசினார். ஆனால் ட்ரம்ப் படைத்தளத்தில் தான் சந்தித்து பேசினார்.

ஈராக்கில் அமெரிக்க ராணுவம் உள்ள பகுதிக்கு ரகசிய பயணம் செய்தார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ஈராக்கில் உள்ள அல் அசாத் விமானத்தளத்துக்கு சென்று அங்குள்ள வீரர்களிடம் கலந்துரையாடிய ட்ரம்ப், "இனி அமெரிக்கா சர்வதேச போலீஸ் வேலை பார்க்காது சிரியா மற்றும் ஆப்கானிலிருந்து படைகளை விலக்கி கொள்ளும்" என்றார்.

2009ம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா இதேபோல ஈராக்கிற்கு சென்று படைகளை பார்வையிட்டார். 2008ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போதும் இங்கு வந்து ராணுவத்தினரை பார்வையிட்டார். 

இந்த இரண்டு பயணங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கால, நேரத்தில் மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் வித்தியாசமான அணுகுமுறையாக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இரு காலங்களுக்குமிடையே நிறைய விஷயங்கள் மாறியுள்ளன.

ஒபாமா பதவியேற்ற 3 மாதத்துக்குள் இவர்களை வந்து சந்தித்தார். ஆனால் ட்ரம்ப் பதவியேற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இப்போதுதான் சந்திக்கிறார். 

ஒபாமாவின் பயணத்தின் போது அமெரிக்க படைகளை ஈராக் நாட்டிலேயே சந்தித்து பேசினார். ஆனால் ட்ரம்ப் படைத்தளத்தில் தான் சந்தித்து பேசினார். 

ஈராக் பிரதமரை சந்தித்து பேசினார் ஒபாமா, ட்ரம்ப் சந்திக்காமல் போனில் பேசிவிட்டு சென்றுள்ளார். மேலும் ஒபாமா, அமெரிக்க படைகளை திரும்ப பெற மாட்டோம்; சிரியாவில் அமைதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம் என்றார். ஆனால் ட்ரம் போலீஸ் வேலை வேண்டாம் வெளியேறுகிறோம் என்றார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.