This Article is From Oct 20, 2018

ஜம்மூ - காஷ்மீர் மாநில உள்ளாட்சித் தேர்தல்: இன்று முடிவுகள் வெளியீடு!

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன

ஜம்மூ - காஷ்மீர் மாநில உள்ளாட்சித் தேர்தல்: இன்று முடிவுகள் வெளியீடு!

உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 35.1 சதவிகதம் வாக்குகள் பதிவாகின

Srinagar:

ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால், மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகபடுத்தப்பட்டுள்ளது. 13 ஆண்டுகள் கழித்து நடந்த ஜம்மூ - காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல், 4 கட்டங்களாக நடத்தப்பட்டன. 79 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த இந்தத் தேர்தலில் 17 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாக்களர்கள் இருந்தனர்.

1,145 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், 3,372 பேர் போட்டியிட்டனர். அக்டோபர் 8, 10, 13 மற்றும் 16 ஆம் தேதிதகளில் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்தது. காஷ்மீரில் வாக்குப் பதிவு மிகக் குறைவாக நடைபெற்றது. அதே நேரத்தில் ஜம்மூ மற்றும் லடாக் பகுதியில் அதிக சதவிகிதத்தினர் வாக்களித்தனர்.

காஷ்மீரில் மொத்தம் 598 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 231 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 181 தொகுதிகளில் யாரும் போட்டியிடவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 35.1 சதவிகதம் வாக்குகள் பதிவாகின.

.