This Article is From Aug 28, 2020

எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கதான் கூட்டணிக்கு தலைமையேற்கும்; முதல்வர் பழனிசாமி!

முன்னதாக பா.ஜ.க, தாங்கள் கை காட்டும் கட்சிதான் ஆட்சியில் அமரும் என கூறியிருந்தது. இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கதான் கூட்டணிக்கு தலைமையேற்கும்; முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை பா.ஜ.கவில் சமீபத்தில் இணைந்தது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியது.

முன்னதாக பா.ஜ.க, தாங்கள் கை காட்டும் கட்சிதான் ஆட்சியில் அமரும் என கூறியிருந்தது. இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது.

வரும் சட்டமன்றத் தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பது விவாத பொருளாக மாறியது. இந்நிலையில் இன்று தஞ்சையில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் தேர்தலை சந்திக்கும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

.