This Article is From Sep 28, 2018

‘பேச்சுவார்த்தைக்கு முன்னர் நடவடிக்கை வேண்டும்!’- பாகிஸ்தானுக்கு செக் வைத்த சுஷ்மா

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (Sushma Swaraj), பங்கெடுத்து வருகிறார்

தெற்கு ஆசியாவில் அமைதியைக் குலைக்க பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன, சுஷ்மா

ஹைலைட்ஸ்

  • சுஷ்மா, ஸார்க் பேச்சுவார்த்தையின் பாதியிலேயே கிளம்பிவிட்டார்
  • இதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி கண்டனம் தெரிவித்தார்
  • சுஷ்மாவுக்கு அடுத்த மீட்டிங் இருந்ததால் சீக்கிரமே கிளம்பினார் எ தெரிகிறது
New York:

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (Sushma Swaraj), பங்கெடுத்து வருகிறார். சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் இருந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட சுஷ்மா, ‘தெற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட தக்க சூழல் அமைய வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும், ‘தெற்கு ஆசியாவில் அமைதியைக் குலைக்க பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் தீவிரவாதம் தான் அமைதியை சிதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த விதப் பாகுபாடுமின்றி தீவிரவாதத்தை ஒழிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஆதரவாக இருக்கும் சூழலையும் மாற்றியமைக்க வேண்டும்’ என்று பாகிஸ்தானை சூசகமாக குற்றம் சாட்டினார். 

‘உயர் மட்டப் பேச்சுவார்த்தை என்பது அமைதியான சூழல் இருக்கும் போது தான் நடக்கும். தீவிரவாதம் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் தான் முக்கியம்’ என்றும் தெரிவித்தார். 

இந்தியாவின் ராணுவ வீரர் ஒருவரும், 3 போலீஸாரும் கடந்த வாரம் ஜம்மூ - காஷ்மீர் மாநிலத்தில் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுடன் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. 

சமீபத்தில் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு, ‘இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம்’ என்று கடிதம் எழுதி இருந்தார். அதற்கு மோடியும் முதலில் சம்மதித்தார். ஆனால், கடந்த வாரம் நடந்த சம்பவத்தை அடுத்து பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்திய அரசு.

இந்திய அரசின் முடிவை அடுத்து இம்ரான் கான் ட்விட்டரில், ‘இந்தியாவின் முடிவால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் தொலைநோக்குப் பார்வையற்ற, குறுமதியாளர்கள் உயர்ந்த பொறுப்புகளை வகிப்பதை பார்த்து வருகிறேன்’ என்று பதிவிட்டார். 
 

.