This Article is From Jan 31, 2019

‘மோடியின் ஈகோவுக்காக…’- எரிச்சலின் உச்சத்தில் சந்திரபாபு நாயுடு

அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டனை நான் சந்தித்தபோது கூட, மிஸ்டர்.கிளின்டன் என்றே அழைத்தேன், நாயுடு

‘மோடியின் ஈகோவுக்காக…’- எரிச்சலின் உச்சத்தில் சந்திரபாபு நாயுடு

மோடி, அரசியலைப் பொறுத்தவரை எனக்கு ஜூனியர், நாயுடு

ஹைலைட்ஸ்

  • 2014 தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தார் நாயுடு
  • அவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வந்தார்
  • பாஜக, கோரிக்கையை நிறைவேற்றாததால் கூட்டணியை முறித்தார் நாயுடு
Amaravati:

‘ஆந்திர பிரதேசத்தின் நன்மைக்காகவும், மாநிலத்தின் திட்டங்கள் கொண்டு வருவதற்காகவும், அரசியலில் எனக்கு ஜூனியரனா பிரதமர் மோடியை, ‘சார்' என்று அழைத்தேன். அவரது ஈகோவை சமாளிப்பதற்கு அப்படிச் செய்தேன்' என்று கூறியுள்ளார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. 

‘ஆந்திர பிரதேசத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்து நான், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து மோடியிடம் வலியுறுத்தி வந்தேன்' என்று கூறும் சந்திரபாபு,

‘அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டனை நான் சந்தித்தபோது கூட, மிஸ்டர்.கிளின்டன் என்றே அழைத்தேன். அவரை நான் சார் என்று அழைக்கவில்லை.

மோடி, அரசியலைப் பொறுத்தவரை எனக்கு ஜூனியர். ஆனால், அவர் பிரதமராக பதவியேற்ற பிறகு, ‘சார்' என்றுதான் அழைத்தேன். அவரது ஈகோவைச் சமாளிக்கவே அப்படிச் செய்தேன்.

அப்படி அழைத்தாலாவது என் மாநிலத்துக்கு நல்லது செய்வார் என்று நினைத்தேன். 2014 ஆம் ஆண்டு பாஜக-வுடன் கூட்டணி வைத்தது கூட அதற்குத்தான். நாங்கள் தனியாக போட்டியிட்டிருந்தால் கூட, எங்களுக்குக் கூடுதலாக 10 தொகுதிகள் கிடைத்திருக்கும். ஆனால், மாநிலத்தின் நலனைக் கருத்தில் கொண்டுதான் பாஜக-வுடன் கூட்டணி அமைத்தோம்' என்று கொதித்துள்ளார்.

தேர்தலுக்குப் பின்னரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்த அவர், கூட்டணியிலிருந்து வெளியேறினார். அப்போதிலிருந்து பாஜக-வுக்கு எதிராக தொடர்ந்து போர் முழக்கமிட்டு வருகிறார் நாயுடு.

.