This Article is From Apr 03, 2020

மகாராஷ்டிராவில் இருந்து நடந்து வந்த தமிழக இளைஞர் பலி: ராமதாஸ் அறிவுரை

கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அங்கேயே இருப்பதுதான் பாதுகாப்பானது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உணவு, தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்து பாதுகாப்புடன் வாழ வகை செய்ய வேண்டும்!

மகாராஷ்டிராவில் இருந்து நடந்து வந்த தமிழக இளைஞர் பலி: ராமதாஸ் அறிவுரை

தமிழக இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். - ராமதாஸ்

ஹைலைட்ஸ்

  • மகாராஷ்டிராவில் இருந்து நடந்து வந்த தமிழக இளைஞர் பலி: ராமதாஸ் அறிவுரை
  • வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அங்கேயே இருப்பதுதான் பாதுகாப்பானது
  • சொந்த ஊர் திரும்ப ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்

மகாராஷ்டிராவில் இருந்து நடந்து வந்த தமிழக இளைஞர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஊர் திரும்ப ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என பாமாக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், கடந்த 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் நடமாட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும், நாட்டின் பல மாநிலங்களில் கூலித்தொழிலாளர்களாக பல்வேறு மாநிலத்தவர் பணியாற்றி வருகின்றனர். 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் உணவின்றி தவிக்கும் அவர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்லத் தொடங்கினர்.

தமிழகத்தை சேர்ந்த சிலர் மகாராஷ்டிர மாநிலத்தில் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 26 பேர் ஒரு குழுவாக தமிழகத்திற்கு நடைபயணமாக புறப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் செகந்திராபாத் வழியே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, நாமக்கல்லைச் சேர்ந்த லோகேஷ் சுப்ரமணி என்ற தொழிலாளி உயிரிழந்தார். தொடர்ந்து, உயிரிழந்த லோகேஷ் சுப்ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "கொரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து நாமக்கல் நகருக்கு நண்பர்களுடன் நடந்தே வந்த லோகேஷ் பாலசுப்ரமணியன் என்ற 21 வயது இளைஞர் தெலங்கானாவில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்xகு ஆழ்ந்த இரங்கல்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அங்கேயே இருப்பதுதான் பாதுகாப்பானது. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உணவு, தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்து பாதுகாப்புடன் வாழ வகை செய்ய வேண்டும்!

மகாராஷ்டிர மாநிலத்தில் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் சொந்த ஊர் திரும்ப ஆபத்தான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். மகாராஷ்டிர அரசுடன் பேசி அங்குள்ள தமிழ் இளைஞர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

.