This Article is From Sep 08, 2020

கேள்வி நேரத்துடன் மூன்று நாட்கள் நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டபேரவை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்துடன் மூன்று நாட்கள் நடைபெறுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தற்போதும் வரும் 14-ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாற்றங்கள் பல துறைகளில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது அரசு நிர்வாகத் துறையையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் மாதத்தில் கடைசியாக நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் வருகிற 14 முதல் மூன்று நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

வழக்கமாக கூட்டம் கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் நடைபெறாமல் கலைவானர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

14-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவானர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் இன்று  காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், சட்டப்பேரவை தொடங்கும் முதல் நாளன்று மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும், அதன் பின்னர் கூட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சமூக இடைவெளிவிட்டு இருக்கைகள் அமைக்கப்படும் என்றும், அதே போல சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் 72 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதே போல பத்திரிக்கையாளர்கள், பேரவை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.

இந்த மூன்று நாள் பேரவையில் கேள்வி நேரம் உண்டு என்றும் சாபாநாயகர் கூறியுள்ளார்.

.