This Article is From Oct 11, 2018

‘சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றலாம்!’- ஆளுநர் பேச்சு

சுகாதாரத் துறையில் தமிழகம் மக்களுக்கு அளிக்கும் சேவை மிகவும் முக்கியமானது.

‘சுகாதாரத் துறையில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றலாம்!’- ஆளுநர் பேச்சு

சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றலாம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் பன்வாரிலால், ‘சுகாதாரத் துறையில் தமிழகம் மக்களுக்கு அளிக்கும் சேவை மிகவும் முக்கியமானது. இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும். மிகவும் குறைவான மருத்துவ வசதியுள்ள நமது நாட்டில் தமிழ்நாடு ஒரு முன் மாதிரியாக திகழ்கிறது.

மருத்துவ சுற்றுலாவுக்கு, கிழக்கு ஆசியாவில் தமிழகம் முன்னிலையில் இந்தக் காரணத்தினால் தான் உள்ளது. நோய்களை கண்டறிவதிலும் அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதிலும் தமிழகம் சிறப்பாக இயங்குகிறது. சிசுக்கள் இறப்பு சதவிகிதத்தைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே மிகக் குறைவான விகிதத்தைத் தமிழகம் தான் கொண்டுள்ளது. தமிழகத்தில் தான், பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்த மருத்துவர்கள் அதிகமாக இருக்கின்றனர்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.