This Article is From Jan 12, 2020

‘’ஜனவரி 14-ம்தேதியையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்’’ – ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழகத்தில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாண்டைகள், பொங்கல் சாமான்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

‘’ஜனவரி 14-ம்தேதியையும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்’’ – ராமதாஸ் வலியுறுத்தல்!!

ஜனவரி 14-ம்தேதியையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

போகிப் பண்டிகையான ஜனவரி 14-ம்தேதியையும் தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாண்டைகள், பொங்கல் சாமான்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தமிழக அரசும் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசினை அளித்து வருகிறது. ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் போகிப் பண்டிகையான ஜனவரி 14-ம்தேதியும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்!

பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்! என்று கூறியுள்ளார்.

.