This Article is From May 18, 2020

சலூன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி! அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப் பணிகளை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது.

சலூன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி! அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்

சென்னை உள்ளிட்ட சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில் சலூன்களை திறக்க அனுமதி

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் நாளை முதல் சலூன்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி
  • சென்னை உள்ளிட்ட சில இடங்களில் சலூன்களுக்கான தடை நீட்டிப்பு
  • சலூன்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் சலூன் கடைகள்  குறிப்பிட்ட சில பகுதிகளை தவிர்த்து மற்ற அனைத்து இடங்களிலும் நாளை முதல் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது- 

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புப் பணிகளை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது.

வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நோய்த்தொற்று குறையக்குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது முடிதிருத்தும் நிலையங்களில் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரகப் பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் நாளை (19.05.2020) முதல் இயங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடிதிருத்தும் முகக் கவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடிதிருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி யை அளிக்குமாறும் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வகுக்கும்.

இவ்வாறு தமிழக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

.