This Article is From Jul 10, 2020

தமிழகத்தில் இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு! 4,163 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையை தவிர்த்து அதிகபட்சமாக மற்ற மாவட்டங்களை பொருத்தளவில் மதுரையில் 192, சேலத்தில் 127, திருநெல்வேலியில் 145, கன்னியாகுமரியில் 105, செங்கல்பட்டில் 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு! 4,163 பேர் டிஸ்சார்ஜ்

இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இன்று மட்டும் மொத்தம் 37 ஆயிரத்து 309 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இன்று பாதிப்பு ஏற்பட்டவர்களில் 2,196 பேர் ஆண்கள், 1,484 பேர் பெண்கள் ஆவர். 

கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 53 அரசு மற்றும் 48 தனியார் என மொத்தம் 101 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இன்று மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 17 பேர் தனியார் மற்றும் 47 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு 1,829 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பு மற்றும் டிஸ்சார்ஜுகளை தவிர்த்து தமிழகத்தில் தற்போது மொத்தம் 46,105 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 

.