This Article is From Jul 23, 2020

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

கொரோனா தொற்று இருக்கிறதா என்று அறிய இன்று மட்டும் 62,472 சோதனைகளை செய்யப்பட்டன.

தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைந்தபட்சமாக 55 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது
  • சென்னையை அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் அதிக பாதிப்பு
  • திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது

தமிழகத்தில் இன்று 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,336 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,92,964 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,210 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,36,793 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 52,939 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 3,232 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

தமிழகத்தில் சென்னையை அடுத்து இன்றைய தினம் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 480 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருவள்ளூரில் 416 பேருக்கும், தூத்துக்குடியில் 415 பேருக்கும், செங்கல்பட்டில் 375 பேருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

கொரோனா தொற்று இருக்கிறதா என்று அறிய இன்று மட்டும் 62,472 சோதனைகளை செய்யப்பட்டன. தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைந்தபட்சமாக 55 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன. அதைத் தொடர்ந்து கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் முறையே 128 மற்றும் 135 பேருக்கு கொரோனாவிலிருந்து மீள சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


 

.