தமிழகத்தில் மேலும் 5,576 பேருக்கு கொரோனா! 78 பேர் பலி!!

சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 5,576 பேருக்கு கொரோனா! 78 பேர் பலி!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4.23 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 


தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 80,401 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,80,524 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8,090 ஆக அதிகரித்துள்ளது.

Newsbeep

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,44,595 ஆக அதிகரித்துள்ளது. 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  இதனால் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,910 ஆக அதிகரித்துள்ளது.