This Article is From Jul 22, 2018

டீ குடிக்க நின்ற போலீஸ், உயிருக்கு போராடியவர் பலியான கொடூரம்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அக்பர் கான் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Jaipur:

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில், மாட்டை கடத்தியதாக, அக்பர் கான் என்பவர் தாக்கப்பட்டு இறந்தார். அவர் இறப்பதற்கு முன் 4 மணி நேரங்களாக போலீஸாருடனிருந்தது தெரியவந்துள்ளது. 

காயமடைந்து உயிருக்கு போராடி வந்த அக்பரை கும்பலிடம் இருந்து மீட்டு, மாடுகளை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட்டு, பின் அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். இடையில் டீ குடித்து விட்டு எந்த அவசரமும் காட்டாமல் இருந்திருக்கின்றன போலீஸார். பின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது அக்பர் மீது தாக்குதல் நடத்தியதாக மூன்று பேரை கைது செய்து வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். முதல் தகவல் அறிக்கையை நாங்கள் ஆராய்ந்ததில், சம்பவம் நடந்தது தொடர்பாக போலீஸுக்கு 12.41 மணிக்கு அழைப்பு வந்துள்ளது. 1.20 மணிக்கு காவல் துறை வந்ததாக, வன்முறை குறித்து போலீஸுக்கு தகவல் கொடுத்த நேவல் கிஷோர் கூறுகிறார். 

காவல் துறையினருடன் கிஷோர் சென்றிருக்கிறார். அது பற்றி அவர் கூறுகையில் " போலீஸார் அக்பரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரது உடலில் மண்ணாக இருந்ததால் முதலில் குளிப்பாட்டினர். பின் அவரை அழைத்துக் கொண்டு, எங்கள் இல்லத்துக்கு சென்று,  மாடுகளை கோசலைக்கு எடுத்துச் செல்ல வாகனத்துக்காக காத்திருந்தோம்" என்றார். அப்போது கிஷோரின் உறவினர் மாயா என்பவர், வாகனத்துக்குள் அக்பர் போலீஸார் தாக்கப்படுவதை பார்த்துள்ளார். மேலும், அப்போது அவர் உயிருடன் இருந்ததாகவும் கூறுகிறார்.    

பின்னர் அக்பர் வலியில் துடித்ததால், அவருக்கு டீ செல்லிவிட்டு, போலீஸாரு டீ குடித்துவிட்டு வாகனத்துக்காக காத்திருந்திருக்கின்றனர். "அவர்கள் 4 கப் டீ ஆர்டர் செய்தனர்" என்று டீ க்கடைக்காரர் தெரிவிக்கிறார்.

அங்கிருந்து கிளம்பிய அவர்கள் மீண்டும் காவல் நிலையம் சென்றுள்ளனர். அங்கிருந்து கோசாலைக்கு சென்றனர் என்கிறார் கிஷோர். இந்த வேலைகளை முடிக்கும்போது, அக்பர் உயிரிழந்துவிட்டார். பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நேரம் 4 மணி என மருத்துவமனை பதிவேட்டில் பதிவாகி இருக்கிறது. 

அக்பரும் அவரது நண்பரும், இரண்டு மாடுகளை பக்கத்து கிராமத்தில் இருந்து வாங்கிக் கொண்டு தங்களது இல்லத்துக்கு எடுத்து செல்லும்போது தாக்கப்பட்டனர். இரக்கம் இன்றி அவர்களை  கல் மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் போலீஸ் மீது ஏதேனும் குற்றம் இருப்பது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில உள் துறை அமைச்சர் குலாப் சந்த் கத்தாரியா தெரிவித்துள்ளார்.

.