This Article is From Jul 16, 2019

“இது காமெடியா..?”- துயரத்தை கிண்டலடித்த நடிகை டாப்சிக்கு பாடம் எடுத்த நெட்டிசன்ஸ்!

ஒரு ட்விட்டர் பயனர், “மிகக் கொடூரமான கொலைச் சம்பவத்தில் கேலி செய்யும் விதத்தில் ட்வீட் இடுவது சரியல்ல” என்றார்.

“இது காமெடியா..?”- துயரத்தை கிண்டலடித்த நடிகை டாப்சிக்கு பாடம் எடுத்த நெட்டிசன்ஸ்!

இன்னொருவர், “இதன் பெயர் கேலியா. உங்களுக்கு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார். 

ஹைலைட்ஸ்

  • டாப்சி போட்ட ட்வீட், இயக்குநர் சந்தீப் ரெட்டியை கேலி செய்வே எனப்படுகிறது
  • தனது முதல் ட்வீட்டுக்கு பின்னர் விளக்கம் கொடுத்தார் டாப்சி
  • அப்படி இருந்தும் டாப்சியை நெட்டிசன்கள் விடவில்லை
New Delhi:

நடிகை டாப்சி பானு, சமீபத்தில் பதிவிட்ட ட்வீட் ஒன்றுக்கு நெட்டிசன்கள் வரிந்துகட்டிக் கொண்டு வந்துவிட்டனர். NDTV செய்தி ஒன்றை ரீ-ட்வீட் செய்திருந்தார் டாப்சி. அந்த செய்தியின் தலைப்பு, “19 வயது காதலியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரின் தலையை நொறுக்கிக் கொலை செய்துள்ள நபர்” என்று இருந்தது. இதற்கு டாப்சி, “அல்லது, இருவரும் பைத்தியக்காரத்தனமான காதலில் இருந்துள்ளார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்படி செய்ததன் மூலம் அந்த நபர், தனக்குள் இருந்த ‘உண்மை' காதலை வெளிப்படுத்தியுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்” என்று கேலி செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்தார். 

சமீபத்தில் ‘அர்ஜுன் ரெட்டி' தெலுங்கு படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்' வெளியானது. இந்தப் படத்தை இயக்கியிருந்தது சந்தீப் ரெட்டி வாங்கா. அவர் படத்தையொட்டி கொடுத்த நேர்காணல் ஒன்றில், “ஒரு பெண்ணை அறையாமல் எப்படி உங்களின் காதல் உணர்வை வெளிப்படுத்துவது” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். சந்தீப்பை கிண்டல் செய்யும் வகையில்தான் டாப்சியின் ட்வீட் அமைந்திருந்தது. ஆனால், ஒரு 19 வயதுப் பெண்ணின் கொலைச் செய்தியில் அவர் இந்த கேலியை செய்திருந்ததை நெட்டிசன்கள் சாந்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் டாப்சியை வறுத்தெடுத்துவிட்டனர். 

டாப்சியின் இரண்டாவது ட்வீட்:

டாப்சிக்குப் பாடம் எடுத்த ட்விட்டர்:

ஒரு ட்விட்டர் பயனர், “மிகக் கொடூரமான கொலைச் சம்பவத்தில் கேலி செய்யும் விதத்தில் ட்வீட் இடுவது சரியல்ல” என்றார். இன்னொருவர், “இதன் பெயர் கேலியா. உங்களுக்கு மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார். 

இப்படி பலரும் தன்னை விமர்சிக்க டாப்சி, “சர்காஸம் என்று சொல்லப்படும் கேலி செய்யும் முறையைப் புரிந்து கொள்ளாதவர்கள் எனது ட்வீட்டை மறுதலித்து விடவும்” என்று தொடர் ட்வீட் ஒன்றைப் போட்டார். இருந்தும் நெட்டிசன்கள், அவரை விடுவதாக இல்லை.

.