This Article is From Aug 01, 2018

கூகுள் மேப் பார்த்து பயணம்: புதிதாக வாங்கிய காரைக் கால்வாயில் கவிழ்த்த நண்பர்கள்

ஆக்ரா – லக்னோ விரைவுச்சாலையில் பள்ளம் ஏற்பட்டதையடுத்து இக்கால்வாய் உருவானது.

பெரிய காயங்கள் ஏதுமின்றி நான்கு நண்பர்களும் தப்பித்தனர்.

Lucknow:

மும்பையில் புதிதாக வாங்கிய காரில் நான்கு நண்பர்கள் உ.பி-இன் கண்ணவுஜ் மாவட்டத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு ஆக்ரா – லக்னோ விரைவுச்சாலையில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இருபது அடி கால்வாயில் கார் விழுந்த இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் இன்றி நால்வரும் தப்பித்தனர். ஆக்ராவில் இருந்து 16கி.மீ தொலைவிலுள்ள டௌக்கி என்னும் இடத்தில் இவ்விபத்து நடந்துள்ளது.

கடும் மழைப்பொழிவினால் இன்று காலை ஆக்ரா – லக்னோ விரைவுச்சாலையிலுள்ள சர்வீஸ் சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால் அதில் 20 அடிக்குக் கால்வாய் உண்டானது. விபத்து நடந்த காரின் உரிமையாளர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். மும்பையில் சில நாட்களுக்கு முன்னர் பழைய கார் ஒன்றினை “செகண்ட்-ஹாண்டில்’ வாங்கியிருந்தார். ஊருக்குத் தனது நண்பர்களுடன் அதில் திரும்பிச் செல்கையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

n08uisgo

302கி.மீ நீளமுள்ள இவ்விரைவுச்சாலை வழியாக முதன்முதலாகப் பயணிப்பதால் இவர்கள் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றபோது தெரியாமல் சர்வீஸ் சாலையை அடைந்தனர். அங்கு பள்ளம் ஏற்பட்டிருந்ததை அறியாமல் இவர்கள் சென்ற வண்டி விபத்துக்குள்ளானது. எனினும் உள்ளூர் ஆட்களின் உதவியோடு பெரிய காயங்கள் ஏதுமின்றி உயிர்த்தப்பினர்.

பள்ளத்தில் இருந்து கிரேனின் உதவியுடன் கார் மேலே தூக்கப்படும் காட்சி உள்ளூர்வாசிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதில் மேலே தூக்கும்போது கிரேனின் கொக்கியில் இருந்து மீண்டும் பள்ளத்தில் விழுந்து கார் மேலும் சேதாரனத்துக்குள்ளானது பதிவாகியுள்ளது.
 

3kc4t528

இதனிடையே, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சாலையில் பள்ளம் ஏற்பட்டது குறித்து விசாரித்து 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பைத் தனியார் ஏஜன்சியிடம் அளித்துள்ளார். உடனடியாக இச்சாலையைச் சீர்செய்யும் பொறுப்பையும் அதற்காகும் செலவையும் சாலையை அமைத்த நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11526.73 கோடி ரூபாய் செலவிலான இச்சாலை அமைக்கும் பணி 2015 ஜனவரியில் தொடங்கி 2016 நவம்பரில் பயன்பாட்டுக்கு வந்தது. நாட்டின் மிக நீளமான விரைவுச்சாலையான இதில் இந்திய வான்படை ஜெட் விமானங்கள் புறப்பட்டு தரையிறங்கலாம். இதை ஆக்ரா மேயருடன் தொடர்புடைய நிறுவனம் அமைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

.