This Article is From Jul 04, 2019

தொடரும் கும்பல் தாக்குதல்! கால்நடைகளை திருட வந்ததாக ஒருவர் அடித்துக்கொலை!

திரிபுரா (36), என்பவர் செவ்வாய்க்கிழமையன்று இரவு ஒரு உள்ளூர் கிராமவாசியின் கால்நடை கொட்டகைக்குள் நுழைந்ததாக ராய்சியாபரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திரிபுராவில் தலாய் மாவட்டத்தின் எல்லை கிராமமான ராய்சியாபரியில் நேற்று கால்நடைகளை திருட வந்ததாக ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, திரிபுரா (36), என்பவர் செவ்வாய்க்கிழமையன்று இரவு ஒரு உள்ளூர் கிராமவாசியின் கால்நடை கொட்டகைக்குள் நுழைந்ததாக ராய்சியாபரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அப்போது, அவர் கொட்டகைக்குள் நுழைந்ததை உள்ளூர்வாசிகள் சிலர் பார்த்ததையடுத்து, அனைவருக்கும் குரல் எழுப்பி அவரை மடக்கி பிடித்துள்ளனர். தொடர்ந்து, ஒரு கும்பல் அவர் மீது இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், நள்ளிரவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடனடியாக அந்த கும்பலிடம் இருந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை பலத்த காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

.