This Article is From Jul 11, 2020

சூரத் நகைக்கடையில் விற்பனைக்கு வந்த தங்கம், வைரம் பதித்த முகக்கவசங்கள்!

இதுதொடர்பாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது, வாடிக்கையாளர் ஒருவர் திருமணத்திற்காக, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள் வேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறினார்.

சூரத் நகைக்கடையில் விற்பனைக்கு வந்த தங்கம், வைரம் பதித்த முகக்கவசங்கள்!

சூரத் நகைக்கடையில் விற்பனைக்கு வந்த திங்கம், வைர முகக்கவசங்கள்!

Surat:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ள நிலையில், சூரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.1.5 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரையிலான வைரம் பதித்த முகக்கவசங்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். 

இதுதொடர்பாக நகைக் கடையின் உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது, வாடிக்கையாளர் ஒருவர் தனது வீட்டில் வைத்து நடைபெறும் திருமணத்திற்காக எங்கள் கடைக்கு வந்து, மணமகனுக்கும், மணமகளுக்கும் தனித்துவமான முகக்கவசங்கள் வேண்டும் என கோரியதைத் தொடர்ந்து, தனக்கு இந்த யோசனை வந்ததாக கூறினார்.

தொடர்ந்து, அவர் கூறும்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் வாடிக்கையாளர் மனமக்களுக்கு தனித்துவமான முக்கவசம் வேண்டும் என்று கூறினார். அதனால், நாங்கள் எங்களது விடிவமைப்பாளர்களிடம் இதுபோன்ற தனித்துவமான முகக்கவசங்களை வடிவமைக்க கோரினோம். இதன் பின்னரே வரும் காலங்களில் மக்களுக்கு இது தேவைப்படும் என்ற காரணத்திற்காக அதிகளவில் இதனை உற்பத்தி செய்தோம். இதில் சுத்தமான வைரமும், அமெரிக்க வைரமும், தங்கத்துடன் சேர்த்து பதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

தங்கத்துடன், அமெரிக்க வைரமும் பதித்த முகக்கவசத்தின் விலை ரூ.1.5 லட்சம் ஆகும். இதேபோல், தங்கத்துடன், அசல் வைரமும் பதித்த முகக்கவசத்தின் விலை ரூ.4 லட்சம் ஆகும். அதேபோல், அரசு விதிமுறைக்கு உட்பட்டு இந்த முகக்கவசத்தில் துணியில் இவை அனைத்தும் பதிக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர் விரும்பினால், இந்த துணியில் இருந்து தங்கம் மற்றும் வைரத்தை அகற்றிக்கொள்ளலாம். அதனை வைத்து வேறு நகைகளையும் அவர்கள் செய்துகொள்ளலாம். 

இதுதொடர்பாக அந்த கடையில் இருந்த வாடிக்கையாளர் தேவனாசி கூறும்போது, குடும்பத்தில் நடைபெறும் திருமணத்திற்காக நகை வாங்குவதற்கு இங்கு வந்தேன். அப்போது, இந்த வைரம் பதித்த முகக்கவசங்கள் நகைகளை விட மிகவும் அதிகமாக என்னை ஈர்த்தது. அதனால், எனது உடைக்கு ஏற்ற நிறத்தில் முகக்கவசத்தை வாங்க முடிவு செய்துள்ளேன் என்றார். 

அண்மையில், புனேவில் சங்கர் குராதே என்ற நபர் ரூ.2.89 மதிப்பிலான தங்க முகக்கவசத்தை செய்து அணிந்த செய்தி வைரலாக பரவியது. 

.