This Article is From Mar 06, 2020

“சமஸ்கிருதத்தில பத்திரிகை நடத்து!”- குருமூர்த்திக்கு சுப.வீரபாண்டியன் சவால்

"அப்படிச் செய்வதன் மூலம் சமஸ்கிருதம், தமிழைவிட மேலான மொழி என்பதை நம் மனதில் புகுத்துவார்கள்."

“சமஸ்கிருதத்தில பத்திரிகை நடத்து!”- குருமூர்த்திக்கு சுப.வீரபாண்டியன் சவால்

"குருமூர்த்தி, துக்ளக் இதழை அடுத்த வாரத்திலிருந்து சமஸ்கிரத்தில்தான் நடத்த வேண்டும் என்று. அவருக்கு எழுதவும் தெரியாது. எவனுக்கும் படிக்கவும் தெரியாது"

ஹைலைட்ஸ்

  • திமுக கூட்டத்தில் குருமூர்த்திக்கு எதிராக பேசியுள்ளார் சுப.வீ
  • துக்ளக் இதழில் வந்த தகவலை மேற்கோள் காட்டி விமர்சனம்
  • குருமூர்த்திக்கு சுப.வீ வெளிப்படையாக சவால்விட்டுள்ளார்

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், திமுக மேடையில் ‘துக்ளக்' இதழின் ஆசிரியர் குருமூர்த்தியை வெளுத்து வாங்கியுள்ளார். சமீபத்தில் மத்திய அரசு தரப்பு, ‘தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறைக்குக் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பு வந்ததிலிருந்து திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள், போர் முழக்கம் இட்டு வருகின்றன.

இது குறித்து திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய சுப.வீ, “நான் நாத்திகன். நாத்திகர்களாக இருக்கும் நாங்கள், கோயில் யாருக்குக் கீழ் வந்தால் என்னவென்று கவலைப்படாமல் இருக்க முடியாது. காரணம் தமிழகத்தில் இருக்கும் கோயில்கள் தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. அது நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. தமிழ் அடையாளங்களை அழிக்கும் மத்திய அரசுக்கு எதிராக நாங்கள் போராடுவோம். கோயில்களை எதற்கு தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கீழ் மத்திய அரசு கொண்டு வரப் பார்க்கிறது தெரியுமா. அங்கிருந்து தமிழை விரட்டிவிட்டு, முழுக்க முழுக்க சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகத்தான்.

அப்படிச் செய்வதன் மூலம் சமஸ்கிருதம், தமிழைவிட மேலான மொழி என்பதை நம் மனதில் புகுத்துவார்கள். அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். நேற்று வந்த ‘துக்ளக்' இதழில் குருமூர்த்தி என்னும் அதிமேதாவி எழுதுகிறார், சமஸ்கிருதத்தில் 10 கோடி சொற்கள் இருக்கின்றன என்று.

தமிழில் வெறும் ஒரு லட்சத்துக்கு 24 ஆயிரம் சொற்கள்தான் இருக்கின்றனவாம். நேற்று இரவு உட்கார்ந்து அனைத்துச் சொற்களையும் அவர் எண்ணிவிட்டார் போல. அப்படி 10 கோடி சொற்கள் இருக்கும் சமஸ்கிரத்திலேயே துக்ளக் இதழை நடத்தலாமே. நான் சவால்விடுகிறேன், குருமூர்த்தி, துக்ளக் இதழை அடுத்த வாரத்திலிருந்து சமஸ்கிரத்தில்தான் நடத்த வேண்டும் என்று. அவருக்கு எழுதவும் தெரியாது. எவனுக்கும் படிக்கவும் தெரியாது. இதுதான் சமஸ்கிருதத்தின் யோக்கியதை,” எனக் கொந்தளிப்பாகப் பேசினார். 

.