This Article is From Nov 29, 2019

காதல் கடிதம் எழுதிய மாணவர்கள்; கட்டி வைத்து தண்டித்த பள்ளி நிர்வாகம்!

உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, இது போன்று மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது ஒன்றும் புதிதான ஒன்றல்ல என்று தெரிவிக்கின்றன.

காதல் கடிதம் எழுதிய மாணவர்கள்; கட்டி வைத்து தண்டித்த பள்ளி நிர்வாகம்!

இரண்டு மாணவர்கள் பள்ளி மேஜையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

Anantpur:

ஆந்திராவில் காதல் கடிதம் எழுதிய காரணத்திற்காக பள்ளி மாணவர்களை மேஜையில் கட்டி வைத்து தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

ஆந்திர பிரதேச மாநிலம், ஆனந்தபூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரை மேஜையில் கட்டிவைத்து தண்டித்த பள்ளி நிர்வாகிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அம்மாநில சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக ஆர்வலர் அச்யுத்தா ராவ் கூறும்போது, காதிரியில் உள்ள பள்ளியில், 5ம் வகுப்பை சேர்ந்த மாணவனையும், 3ம் வகுப்பை சேர்ந்த மாணவனையும் கை, கால்களை மேஜையில் கட்டி பள்ளி நிர்வாகம் தண்டித்துள்ளது.

இந்த தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை இரண்டு காரணங்களை கூறுகிறார். அதில், ஒரு மாணவன் காதல் கடிதம் எழுதியதாகவும், மற்றொரு மாணவன் சக மாணவர்களின் பொருட்களை எடுத்துச்செல்வதாகவும் கூறுகிறார். 

மேலும், தான் அந்த மாணவர்களை கட்டி வைக்கவில்லை என்றும், அந்த மாணவர்களின் பெற்றோர்களே அவ்வாறு அவர்களை கட்டி வைத்ததாகவும் தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார். எனினும், எதற்காக பெற்றோர்கள் ஏன் பள்ளி வளாகத்திற்குள்ளே மாணவர்களை தண்டித்தனர்? அதற்கு ஏன் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார். 

அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

இதைதொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, இது போன்று மாணவர்களுக்கு தண்டனை வழங்குவது ஒன்றும் புதிதான ஒன்றல்ல என்று தெரிவிக்கின்றன. 

.