This Article is From Sep 11, 2018

அறிவாலயத்தில் கலைஞர் சிலை… நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின்!

மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் முழு உரு வெண்கலச் சிலை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக-வின் தலைமைக் கழகத்தில் அமைக்கப்பட உள்ளது

அறிவாலயத்தில் கலைஞர் சிலை… நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின்!

மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் முழு உரு வெண்கலச் சிலை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக-வின் தலைமைக் கழகத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், கருணாநிதி சிலை செய்யும் இடத்திற்கு இன்று நேரில் சென்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தலைமைக் கழகம், அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட உள்ள முத்தமிழறிஞர், தலைவர் கலைஞரின் முழு உருவ வெண்கலச் சிலையினை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள சிற்பி தீனதயாளன் வடித்து வருகிறார். தலைவர் கலைஞரின் அவ்வெண்கலச் சிலையின் வடிவமைப்பு பணிகளை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டார்’ என்று குறிப்பிட்டுப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 7 ஆம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் கருணாநிதி. இதையடுத்து அவரது உடல் சென்னை, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

.