This Article is From Nov 19, 2018

இலங்கை வாக்கெடுப்பை வெல்லும் முனைப்பில் ரனில் விக்ரம சிங்கே

மீண்டும் பிரதமர் பதவிக்கு வரத்துடிக்கும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு சாதகமாக அமைந்த இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிபர் நிராகரித்துள்ளார். 

இலங்கை வாக்கெடுப்பை வெல்லும் முனைப்பில் ரனில் விக்ரம சிங்கே

இரு அணிகளும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுக் கொண்டுள்ள நிலையில் இலங்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

Colombo:

ராஜபக்‌சே தலைமையிலான அரசு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை இரண்டு நாட்களுக்குள் இரண்டு முறை சந்தித்த பிறகு இலங்கை அதிபர் சிறிசேனா அனைத்து கட்சி தலைவர்களை அவசர கூட்டத்துக்கு அழைத்துள்ளார். 

மீண்டும் பிரதமர் பதவிக்கு வரத்துடிக்கும் ரனில் விக்ரமசிங்கேவுக்கு சாதகமாக அமைந்த இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிபர் நிராகரித்துள்ளார். 

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிபர் குரல் வாக்கெடுப்பு அல்லது எலெக்ட்ரானிக் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் மூன்றாவது நாளாக ராஜபக்சே மீது நாடாளுமன்றத்தில் தண்ணீர் பாட்டில்கள், புத்தகங்கள், மிளகாய்பொடி, நாற்காலிகளைக் கொண்டு தாக்கினர்.

அதிபர் "திங்கட்கிழமை ஆரம்பிக்கும் நாடாளுமன்றம் சண்டையின்றி துவங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்

நாடாளுமன்ற சபாநாயகர் ஜெயசூர்யா மற்றும் திஸ்னயகே ஆகியோர் அதிபர் நடத்திய கூட்டத்திக் கலந்து கொள்ளவில்லை.

"இதற்கு முன் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மான வெற்றியை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதைவிட எளிய வழிகள் உள்ளன" என்று அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதிபருக்கு ரனில் விக்ரமசிங்கே அணியை பிடிக்கவில்லை. அதே போல் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெல்லும் முனைப்பில் ரனில் அணி உள்ளது. இரு அணிகளும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டுக் கொண்டுள்ள நிலையில் இலங்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.