ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!

நேற்று ராணுவ மேஜர் கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு தாக்குதலில், 3 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக்கில், என்கவுண்டர் நடந்தது.


Srinagar: 

ஹைலைட்ஸ்

  1. என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை என தகவல்
  2. இந்த தாக்குதலில், ராணுவ மேஜர் ஒருவரும் கொல்லப்பட்டார்
  3. சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இதில் ஒரு ராணுவ வீரரும் மரணமடைந்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என்று தெரிகிறது. மேலும், ஒரு தீவிரவாதி அந்த பகுதியில் மறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் தீவிர தேடலில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின் போதே பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் என்கவுண்டர் நிகழ்த்தப்பட்டுள்ளது.

nlki121o

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார். வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். மேலும் நேற்று நடந்த தாக்குதலில் வீட்டுக்குள் இருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனிடையே புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்து வரும் நிலையில், இந்திய எல்லைப்பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................