This Article is From Jan 01, 2019

புத்தாண்டை இப்படித்தான் கொண்டானும்: பாடம் சொல்லிக் கொடுத்த ஜெய்ப்பூர்!

2019 புத்தாண்டை ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மக்கள் புத்தாண்டை மது அருந்தாமல் ஒரு புதிய வழியில் கொண்டாடி சிறப்பித்துள்ளனர்

புத்தாண்டை இப்படித்தான் கொண்டானும்: பாடம் சொல்லிக் கொடுத்த ஜெய்ப்பூர்!
Jaipur:

ஒவ்வொரு ஆண்டும் மது அருந்தி புத்தாண்டை கொண்டாடுவது வழக்கமாகி வரும் நிலையில், 2019 புத்தாண்டை ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மக்கள் புத்தாண்டை மது அருந்தாமல் ஒரு புதிய வழியில் கொண்டாடி சிறப்பித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கிய ‘தூத் மஹா உட்சாவ்' (பால் திருவிழா), அங்குள்ள அரசு சாரா அமைப்புக்கள் இணைந்து சுமார் 8,000 லிட்டர் பாலை அங்குள்ள 40,000க்கும் மேல் உள்ள நபர்களுக்கு இலவசமாக வழங்கினர்.

மேலும் இத்திருவிழாவுக்கான் வெளியிடப்பட் போஸ்டர்களில் ‘இந்த புத்தாண்டை, மது அருந்தாமல் பால் அருந்தி கொண்டாடுவோம்' என அறிவிக்கப்பட்டிருந்த்து.

இந்தியன் ஆஸ்துமா கேர் மற்றும் ராஜஸ்தானின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் குழுக்கள் இணைந்து நேற்று மாலை 6 மணி முதல் இலவச பால் வினியோகத்தை ராஜஸ்தான் பல்கலைகழகத்தினர் தொடங்கினர்.

'மது அருந்துவது தீங்கு' என்ற கருத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த விழிப்புணர்ச்சி கொண்ட புத்தாண்டு திருவிழாவை நாங்கள் திட்டமிட்டோம். மேலும் அனைத்து நபர்களுக்கும் பால் வழங்கும் திருவிழாவை நாங்கள் கடந்த 13 வருடங்களாக நடத்தி வருகிறோம், இப்போது இதற்க்கு ஆதரவு தர மக்கள் தொடங்கிவிட்டனர்' என் லோட்டஸ் பாலின், முதன்மை அதிகாரி தீபக் வோஹ்ரா கூறினார்.

ராஜஸ்தானில் உள்ள லோட்டஸ் டைரி, ராஜஸ்தான் ஜாட் கிளப், மில்க் கிளப் ஆப் ராஜஸ்தான் மற்றும் காயத்ரி சக்திபீத் வாட்டிகா ஆகியோர் இணைந்து இந்த புதிய முயற்சியை வெற்றியாக்கினர். மேலும் இந்த விழாவை சிறப்பிக்க காங்கிரஸ் தலைவர் புஷ்பேந்திரா பாரத்வாஜ் சாங்காநேரில் உள்ள 13 வார்டுகளிலும் இந்த பால் திருவிழாவை கொண்டாட விரும்பினர்.

மேலும் ராஜஸ்தான் செவிலியர் சங்கம் சார்பாக அங்குள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் இலவச பால் வினியோகம் செய்தனர்.

.