This Article is From May 20, 2019

சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சிங்கப்பூர் விமானம்; காரணம் என்ன?

சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் விமனம் ஒன்று, திருச்சியில் இருந்து டேக்-ஆஃப் செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சிங்கப்பூர் விமானம்; காரணம் என்ன?

இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம், அவசரமாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Chennai:

சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் விமனம் ஒன்று, திருச்சியில் இருந்து டேக்-ஆஃப் செய்துள்ளது. ஆனால், திடீரென்று அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம், அவசரமாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், “விமானம் அவசரமாக தரையிறங்கினாலும், பத்திரமாகவே இறங்கியது. யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. விமானத்தில் இருந்த 170 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

இஞ்சினில் ஏற்பட்ட சிறிய கோளாறை, விமானி பார்த்துள்ளார். அதைத் தொடர்ந்துதான் அவரசமாக தரையிறக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்துக்கு, விமானத்தின் நிலை குறித்து தெரியப்படுத்தியவுடன், லேண்டிங் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். தீயணைப்பு வீரர்களையும் தயார் நிலையில் வைத்திருந்தோம். 

நகரில் இருக்கும் ஓட்டல்களில் விமானத்தின் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தின் பழுது குறித்து டெக்னீசியன்கள் பார்த்து வருகின்றனர்” என்று கூறினார்கள். 


 

.