This Article is From Jun 16, 2019

ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் வேண்டும் : உத்தவ் தாக்கரே கருத்து

ராமர் கோயிலைக் கட்ட சிவசேனா கட்சி மட்டுமல்ல உலகில் உள்ள இந்து மக்கள் அனைவரும் உங்களுடன் இருப்பார்கள் அரசு முடிவு செய்து விட்டால் யாரும் தடுக்க முடியாது என்றார்.

ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் வேண்டும் : உத்தவ் தாக்கரே கருத்து

இன்று காலை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார்கள்.

Ayodhya:

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். அதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு இருக்கிறது என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிந்தபின் உத்தவ் தாக்கரே தனது எம்பிகளுடன் வந்து அயோத்தி நகருக்கு தரிசனம் செய்வதாக தெரிவித்திருந்தார். அதன்படி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அவரின் மகன் ஆதித்யா தாக்ரே மற்றும் 18 எம்.பிகள் என அனைவரும் அயோத்தி நகருக்கு வந்தனர். 

இண்று காலை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார்கள். அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அயோத்தி தொடர்பான வழக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் இருக்கிறது. மத்தியில் இப்போது வலிமையான அரசும் அமைந்து விட்டது.அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அவசரச் சட்டத்தை நிறைவேற்றி ராமர் கோயிலை கட்ட வேண்டும் அதற்கான துணிச்சல் பிரதமர் மோடிக்கு உள்ளது என்று தெரிவித்தார்.
 ராமர் கோயிலைக் கட்ட சிவசேனா கட்சி மட்டுமல்ல உலகில் உள்ள இந்து மக்கள் அனைவரும் உங்களுடன் இருப்பார்கள் அரசு முடிவு செய்து விட்டால் யாரும் தடுக்க முடியாது என்றார். 

ராமர் கோயிலென்பது அரசியல் அல்ல, அது நம்பிக்கையோடு தொடர்புடையது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்
 
.