This Article is From Dec 26, 2018

சகோதரிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை: கர்ப்பமாக்கி விட்டு இளைஞர் தப்பியோட்டம்

மகளின் தோற்றத்தில் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

சகோதரிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை: கர்ப்பமாக்கி விட்டு இளைஞர் தப்பியோட்டம்

பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரங்களில் சகோதரிக்கு அவரது சகோதரன் பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.

Coimbatore:

சகோதரிக்கு ஓராண்டாக பாலியல் தொல்லை அளித்து, அவரை கர்ப்பமாக்கி விட்டு சகோதரன் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் கோவையில் நடந்திருக்கிறது.

இங்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது தங்கைக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்திருக்கிறார். சகோதரி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.


வீட்டில் பெற்றோர் இல்லாத நேரங்களில் கடந்த ஓராண்டாக தனது தங்கைக்கு அந்த நபர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்தச் சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார்.

அவரது தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, பெற்றோர் அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். இதில், அவர் கர்ப்பம் அடைந்திருப்பது தெரியவந்தது. இதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சிறுமி விவரித்துள்ளார்.

இதற்கிடையே, தங்கையை கர்ப்பமாக்கிய அந்த இளைஞர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளைஞரை தேடி வருகின்றனர்.

.