This Article is From Oct 09, 2018

வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு

மூத்த பத்திரிகையாளராக இருந்த எம்.ஜே. அக்பர் தற்போது மத்திய பாஜக அரசில் வெளியுறவு இணை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். அவர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும், மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பர்

New Delhi:

#MeToo எனப்படும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்த உண்மைகளை வெளியிடும் பிரசாரம், தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த பிரசாரத்தில் நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், புதிதாக சிக்கியிருக்கும் பிரபலம் மூத்த பத்திரிகையாளரும், மத்திய வெளியுறவு இணை அமைச்சருமான எம்.ஜே. அக்பர் ஆவார்.

இவர் மீது பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எம்.ஜே. அக்பரின் கதையை எழுதவுள்ளேன். இந்த கதையில் அவரது பெயரை குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவர் என்னிடம் எதுவும் செய்யவில்லை. ஆனால், ஏராளமான பெண்கள் எம்.ஜே. அக்பர் தொடர்பான மோசமான கதைகளை வைத்துள்ளனர். அவர்கள் ஒருவேளை அக்பர் குறித்த விவரங்களை வெளியிடலாம் என்று கூறியுள்ளார்.
 

More journalists came out with allegations after the tweet.

 

எம்.ஜே. அக்பரை மையமாக வைத்து பலர் ட்விட் செய்து வருவதால், அவரது விவகாரம் தற்போது ட்ரெண்டாக மாறியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ட்ரிபியூன் செய்தி நிறுவன செய்தியாளர் ஸ்மிதா ஷர்மா, “எம்.ஜே. அக்பருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றனர். அவை அனைத்தும் பாலியல் சீண்டல் தொடர்பானவை. நீங்கள் ஒரு பெண் அமைச்சராக தலைமைப் பொறுப்பில் உள்ளீர்கள். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவீர்களா?” என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதில் ஏதும் அளிக்காமல் சுஷ்மா சுவராஜ் சென்று விட்டார். வெளியுறவு இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் தற்போது நைஜீரியாவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.