This Article is From Oct 18, 2018

சபரிமலை பாரம்பரியத்தை அழித்து, பயங்கரவாதத்தை பரப்பும் ஆர்.எஸ்.எஸ்! - பினராயி விஜயன்

ஆக்.22ஆம் தேதி சபரிமலையில் தரிசனம் முடியும் வரை நிலக்கல்லில் போராட்டம் தொடரும் என பாஜக தெரிவித்துள்ளது

சபரிமலை பாரம்பரியத்தை அழித்து, பயங்கரவாதத்தை பரப்பும் ஆர்.எஸ்.எஸ்! - பினராயி விஜயன்

நிலக்கல்லில் போராட்டம் வன்முறையாக மாறியதால் பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் காயமடைந்தனர்.

Thiruvananthapuram:

சபரிமலை தரிசனத்திற்கு பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வன்முறையை கட்டவிழ்த்து வருகின்றனர். இவர்கள் கோவிலின் தனித்துவத்தை அழித்து வருகின்றனர் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக குற்றம்சாட்டினார்.

நான்கு நாள் பயணமாக அரபு நாடுகளுக்கு சென்றுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை சம்பவம் குறித்து தனது முகநூல் மற்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு சபரிமலையில் உள்ளது. அது மதங்களை சோ்ந்தவா்களும் வழிபடலாம் என அனுமதிக்கிறது. சங் பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளால் இந்த உண்மையை தாங்கிகொள்ள முடியவில்லை. இதனால் சபரிமலையின் தனித்துவத்தை அழிப்பதற்கு அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்கின்றனர்.

கேரளாவில் உள்ள மற்ற கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளே பயங்கரவாதத்தை பரப்புகின்றனர். சாதி மேலாதிக்கத்தை நிறுவும் எண்ணத்தோடு சபரிமலையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும், கோவில் பகுதி ஒரு போர்க்களமாக மாறுவதற்கு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என பினராயி விஜயன் தனது பதிவில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்.28ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து, சபரிமலை கோவிலில் 17ஆம் தேதியான நேற்று மாலை 5 மணி முதல் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு பிறகு 22-ம் தேதி நடை அடைக்கப்படுகிறது. இதனால், கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்க நிலக்கல் பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

.