This Article is From Jul 15, 2020

பாஜகவில் இணையப் போவதில்லை; இன்னும் நான் காங்கிரஸை சேர்ந்தவன் தான்: சச்சின் பைலட்

மேலும், தனது எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

பாஜகவில் இணையப் போவதில்லை; இன்னும் நான் காங்கிரஸை சேர்ந்தவன் தான்: சச்சின் பைலட்

ஹைலைட்ஸ்

  • இன்னும் நான் காங்கிரஸை சேர்ந்தவன் தான்: சச்சின் பைலட்
  • பாஜகவில் இணையம் எந்தவொரு திட்டமும் என்னிடம் இல்லை
  • எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும்
New Delhi:

தான் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும் இன்னும் காங்கிரஸை சேர்ந்தவன் தான் என்றும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சச்சின் பைலட் என்டிடிவியிடம் கூறியதாவது, நான் பாஜகவில் இணையப் போவதில்லை. பாஜகவில் இணையம் எந்தவொரு திட்டமும் என்னிடம் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னை பாஜகவுடன் தொடர்புப்படுத்துவது என்பது என்னை இழிவுப்படுத்தும் முயற்சியாகும். நான் இன்னும் காங்கிரஸை சேர்ந்தவன் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், தனது எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய அவர், ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில், அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். 

முதல்வர் அசோக் கெலாட்டுடன் கிட்டதட்ட இரண்டு வருடங்களாக மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, காங்கிரஸூக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், சச்சின் பைலட்டை விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டது தன்னை அவமானப்படுத்தும் செயல் என்று அவர் கூறினார். 

ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு, ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகியதால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் தரப்பில் சச்சின் பைலட்டை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை என்று கூறப்படுகிறது. 

எனினும், சச்சின் பைலட் தன்னை முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் பரிந்துரைக்க வேண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர் முதல்வர் போட்டியில் பின்னுக்கு தள்ளப்பட்டார். 

இதனிடையே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் துவங்கியுள்ளது. இதுதொடர்பாக 19 அதிருப்தி எம்எல்ஏக்களும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு சட்டமன்ற சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இந்த நடவடிக்கையின் மூலம் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, பெரும்பான்மை எண்ணிக்கையை குறைக்க வழிவகை செய்துள்ளது. 

.