This Article is From Mar 14, 2020

அச்சுறுத்தும் கொரோனா! ஆர்.எஸ்.எஸ்ஸின் வருடாந்திர கூட்டம் ரத்து!!

பெங்களூருவில் நடைபெறவிருந்த கூட்டத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்கவிருந்தனர். நாளை தொடங்கி 3 நாட்களுக்கு வருடாந்திர கூட்டம் நடைபெறவிருந்தது.

அச்சுறுத்தும் கொரோனா! ஆர்.எஸ்.எஸ்ஸின் வருடாந்திர கூட்டம் ரத்து!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்கிறது.

ஹைலைட்ஸ்

  • மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது
  • வருடாந்திர கூட்டத்தில் 35 சங் பரிவார் அமைப்பினர் பங்கேற்பார்கள்
  • வருடாந்தி கூட்டம் தொடர்பான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு
Bengaluru:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆர்.எஸ்.எஸ்ஸின் வருடாந்திர கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெறவிருந்த கூட்டத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்கவிருந்தனர். நாளை தொடங்கி 3 நாட்களுக்கு வருடாந்திர கூட்டம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் சுரேஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டும், மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடக்கூடாது என அரசு வலியுறுத்தியதற்காகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் வருடாந்திர கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரசுடன் இணைந்து செயலாற்றி, கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். கொரோனா அச்சுறுத்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, வி.எச்.பி., ஏ.பி.வி.பி., பாரதிய மஸ்தூர் சங் உள்ளிட்ட 35 சங் பரிவார அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள். இதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சுரேஷ் ஜோஷி உள்ளிட்டோர் உரை நிகழ்த்துவார்கள். 

வருடாந்திர கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாற்று தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.