This Article is From Sep 04, 2020

பொது இடங்களில் முககவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்! அமலுக்கு வருகிறது அவசர சட்டம்!!

மேலும், சலுன் கடைகள், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் முககவசம் அணியாவிடில் ரூ.200 அபராதம்! அமலுக்கு வருகிறது அவசர சட்டம்!!

தமிழகத்தில் இனி பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்றை நிலவரப்படி மாநிலம் முழுவதும் இதுவரை 4,51,827 பேர் கொரோனா தொற்றா பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது 51,633 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7,687 பேர் உயிரிழந்துள்ளனர். 3,92,507 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாநில அரசு இம்மாதம் தொடக்கம் முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க இ-பாஸ் அவசியமில்லை என்றும், அதே போல பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தும் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் 7 –ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறுவது குற்றம் என  பொதுச்சுகாதார சட்டத்தில் அவசர திருத்தத்தினை கொண்டுவந்தது. அரசின் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இனி பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்வோருக்கு 500 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறும் தனி நபருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது.

மேலும், சலுன் கடைகள், ஸ்பா, உடற்பயிற்சி கூடங்கள், வணிக வளாகங்களில் அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் அரசு வழிகாட்டுதலை/நெறிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு 500 ரூபாய் அபராதமும், வாகனங்கள் விதிகளை மீறும்பட்சத்தில் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

.