This Article is From Jun 07, 2018

ஆர்.எஸ்.எஸ் தலைமை இடத்தில் பிரணாப்… கொதி கொதிக்கும் காங்கிரஸ்!

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அதன் தலைமை இடமான நாக்பூருக்குச் சென்றுள்ளார்

ஆர்.எஸ்.எஸ் தலைமை இடத்தில் பிரணாப்… கொதி கொதிக்கும் காங்கிரஸ்!

பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்

ஹைலைட்ஸ்

  • இன்று மாலை 6 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் விழாவில் உரையாற்ற உள்ளார் பிரணாப்
  • பிரணாப் தான் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்
  • பிரணாப், காங்கிரஸின் மூத்த தலைவர்
New Delhi:

காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அதன் தலைமை இடமான நாக்பூருக்குச் சென்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சி மத்தியிலேயே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

ராஷ்டிரிய சுயம் சேவக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் தான் மத்தயில் ஆளும் பாஜக-வின் கொள்கை ரீதியில் தாய் வீடு. இந்துக்கள் ஆளும் ராம ராஜ்ஜியம் இந்தியாவில் அமைக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ்-ன் முக்கிய குறிக்கோள். ஆனால் காங்கிரஸோ, மதசார்பற்ற விதத்தில் இந்தியாவின் ஜனநாயகம் இருக்க வேண்டும் என்று தனது கொள்கையை வகுத்துள்ளது. இதனால், இந்தியாவில் இந்த இரண்டு கட்சிகளுக்கு மத்தியில் தான் ஆட்சி அமைப்பதில் போட்டி நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் தலைமை இடம் இருக்கும் நாக்பூருக்குச் சென்று ஒரு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார் என்பது டெல்லி வட்டாரத்தில் மிகப் பெரிய பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது.

பிரணாப், இன்று மாலை 6 மணிக்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்த விவகாரம் குறித்து கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மிகுந்த கொதிப்படைந்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த விஷயம் குறித்து வெளிப்படையாக தங்களது வருத்தத்தையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பிரணாப்பின் மகள் ஷர்மிஷ்தா, `நாக்பூருக்கு நீங்கள் போவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ் உங்களை வைத்து தவறான தகவல்களையும் செய்திகளையும் பரப்ப வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள் பிரணாப். நீங்கள் அங்கு ஆற்றப் போகும் உரை மறக்கப்படும். ஆனால், அவர்களுடன் நீங்கள் இருந்த புகைப்படங்கள் மறக்கப்படாது' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ், `தயவு செய்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதீர்கள் பிரணாப் முகர்ஜி' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே வேளையில் ப.சிதம்பரம், `நீங்கள் அவர்கள் அழைப்பை ஏற்றுள்ளீர்கள். அங்கு சென்று அவர்களின் கொள்கையில் இருக்கும் முரண் குறித்து பேசுங்கள்' என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.

ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகளை தீவிரமாக எதிர்த்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் பிரணாப். இன்று அவரே ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைத்துள்ள ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளது அரசியல் களத்தில் மிகப் பெரிய முரணாக பார்க்கப்படுகிறது.

.