This Article is From Oct 12, 2018

தொடர் சர்ச்சையில் ரஃபேல் விவகாரம்… டசால்ட் நிறுவன தலைவர் விளக்கம்!

ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது

தொடர் சர்ச்சையில் ரஃபேல் விவகாரம்… டசால்ட் நிறுவன தலைவர் விளக்கம்!

எரிக் ட்ரப்பீர், ‘ரஃபேல் விமானங்கள் தயாரிப்பதற்காக இந்தியாவில் நாங்கள் முதலீடு செய்ய உள்ள நிதியில் 10 சதவிகிதத்தைத் தான், ரிலையன்ஸில் முதலீடு செய்வோம்’ என்று விளக்கம் அளித்துள்ளார்

ஹைலைட்ஸ்

  • 100 இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளோம், டசால்ட் தலைவர்
  • ரிலையன்ஸுக்கு முதலீட்டில் 10% தான் பங்கு, டசால்ட் தலைவர்
  • டசால்ட், ரிலையன்ஸை தேர்ந்தெடுக்க வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது
Paris:

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், டசால்டு ஏவியேஷன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ட்ரப்பீர், ‘ரஃபேல் விமானங்கள் தயாரிப்பதற்காக இந்தியாவில் நாங்கள் முதலீடு செய்ய உள்ள நிதியில் 10 சதவிகிதத்தைத் தான், ரிலையன்ஸில் முதலீடு செய்வோம்’ என்று விளக்கம் அளித்துள்ளார். 

8.6 பில்லியன் டாலர் மதிப்பில் இந்தியா - பிரான்ஸ் இடையில் போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், ரஃபேல் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் இணைந்து சொகுசு விமானங்களை தயாரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 36 ரஃபேல் விமானம் வாங்கப்பட உள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக பல விதிமுறைகள் இருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ரஃபேல் ஒப்பந்தம், பிரதமர் நரேந்திர மோடி, 2016-ல் பிரான்ஸுக்கு சென்ற போது இறுதி செய்யப்பட்டது. 

கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சி, ‘பிரதமர் மோடி, ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். மிக அதிக அளவில் பணம் கொடுத்து விமானங்களை வாங்க அவர் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதன் மூலம் அவர் அனில் அம்பானிக்கு உதவி புரிய பார்க்கிறார். ஒப்பந்தத்தில் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை’ என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டி வருகிறது.

இது சம்பந்தமாக நேற்று ‘மீடியாபார்ட்’ என்கின்ற பிரஞ்சு புலனாய்வு பத்திரிகை, டசால்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரியான டோய்க் செகலேன், கடந்த 2017, மே 11 அன்று, தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடம், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்வது கட்டாயமாகும்’ என்று அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையை மீடியாபார்ட் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இப்படிப்பட்ட சூழலில் தான் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸுக்கு சென்றுள்ளார். அவரின் பயணம் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், டசால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் ட்ரப்பீர், ‘ரஃபேல் விமானங்கள் தயாரிப்பதற்காக இந்தியாவில் நாங்கள் முதலீடு செய்ய உள்ள நிதியில் 10 சதவிகிதத்தைத் தான், ரிலையன்ஸில் முதலீடு செய்வோம். ரிலையன்ஸ் அல்லாமல் 100 இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது மட்டுமல்லாமல் 30 நிறுவனங்களில் முதலீடு செய்வதை நாங்கள் உறுதி படுத்திவிட்டோம்’ என்று விளக்கம் அளித்துள்ளார். 

.