This Article is From Feb 20, 2019

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பு!

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது சோனி எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பு!

3 மாதத்துக்குள் தொகையை செலுத்தவில்லை என்றால், அனில் அம்பானி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது சோனி எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சோனி எரிக்சன் நிறுவனம், தங்களுக்கு கொடுக்க வேண்டிய 450 கோடி ரூபாய் தொகையை அனில் அம்பானி கொடுக்காமல் இருக்கிறார் என்று கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில்தான் அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 வாரத்துக்குள் தொகையை செலுத்தவில்லை என்றால், அனில் அம்பானி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

நீதிமன்றத்தில் ஸ்வீடனைச் சேர்ந்த சோனி எரிக்சன் நிறுவனம், ‘ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ரஃபேல் ஒப்பந்தத்தில் முதலீடு செய்ய நிதி உள்ளது. ஆனால், எங்களுக்கு அளிக்க வேண்டிய 550 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கொடுக்க மறுத்து வருகிறது' என்று வாதிட்டது. இந்த குற்றச்சாட்டை அனில் அம்பானி தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. 

அனில் அம்பானி தரப்பு, ‘எனது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியுடன் சொத்து விற்பதில் பிரச்னை  ஏற்பட்டுள்ளது. இதனால், நிறுவனத்தின் நிதியை எடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. நாங்கள் சோனி எரிக்சன் நிறுவனத்திடம் இருக்கும் நிலுவைத் தொகையைக் கொடுக்க எவ்வளவோ முயன்றோம். ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இருக்கும் பிரச்னையால் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது' என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. 

இதையடுத்து சென்ற அக்டோபர் 23 ஆம் தேதி நீதிமன்றம், ‘2018 ஆம் ஆண்டு, டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் சோனி எரிக்சனிடம் வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஓர் ஆண்டுக்கு 12 சதவிகிதம் வட்டியுடன் செலுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டது. 

பொறுப்புத்துறப்பு: ரஃபேல்ஒப்பந்தம்குறித்து NDTV செய்திவெளியிட்டுவருவதால், அனில்அம்பானியின்ரிலையன்ஸ்குழுமம் 10,000 கோடிரூபாய்கோரி அவதூறுவழக்குதொடர்ந்துள்ளது.

.