This Article is From Jul 31, 2019

“இந்தியன் 2” படத்தில் இருந்து விலகுகிறாரா ரவிவர்மன்?

பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் செய்திகள்  வெளியாகி வருகிறது.

“இந்தியன் 2” படத்தில் இருந்து விலகுகிறாரா ரவிவர்மன்?

ஹைலைட்ஸ்

  • பொன்னியின் செல்வன் படத்தை இயக்குகிறார் மணிரத்னம்
  • இந்தியன் 2 படம் அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது
  • வர்வர்மன் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2” படத்தில் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தில் இருந்து அவர் விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன்2” இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இவர்களுடன் சித்தார்த், இன்னும் பலர் நடிக்கின்றனர். அதே வேலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவிருக்கிறது.

இந்தியன் 2 தாமதமாவதால் இந்த படத்தில் இருந்து விலகி மனிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் செய்திகள்  வெளியாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா ராஜேஷ், கீர்த்திசுரேஷ் இன்னும் பலர் நடிக்கவுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல் விரைவில் படக்குழு சார்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

.